இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 9:29 am

இந்திய அணிக்கெதிரான  நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

மென்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளில் தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்படுத்தாடிய இந்திய அணி 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸ்சில் 367 ஓட்டங்களையும் இந்திய அணி 152 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

இதன்பிரகாரம் ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2 – 1 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்