ரஜிவ் காந்தி இரகசியமாக பிரபாகரனை சந்தித்தார் – நட்வர் சிங்

ரஜிவ் காந்தி இரகசியமாக பிரபாகரனை சந்தித்தார் – நட்வர் சிங்

ரஜிவ் காந்தி இரகசியமாக பிரபாகரனை சந்தித்தார் – நட்வர் சிங்

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2014 | 9:52 am

இலங்கை தொடர்பில் பின்பற்றிய கொள்கையே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜிவ் காந்தியின் கொலைக்கு காரணமாகும் என அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த கருத்தினை கூறியுள்ளார்.

தமது அமைச்சரவைக்கு அறிவிக்காமலேயே இந்திய இராணுவத்தினரை ரஜிவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்திருந்ததாக இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பூர்வாங்க ஆயத்தங்களோ அல்லது புரிந்துணர்வோ இல்லாத நிலையிலேயே இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு சென்றதாகவும் நட்வர் சிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று வெளியிடப்படவுள்ள நட்வர் சிங்கின் சுயசரிதை நூலில், ராஜிவ் காந்தி, அவரின் மனைவி சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பம் தொடர்பிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த காலப்பகுதியில் ரஜிவ் காந்தி இரகசியமான முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்ததாகவும், அவர் பிரபாகரன் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் நட்வர் சிங், தனது தொலைக்காட்சி நேர்காணலின்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் பிரச்சினைக்கு சாதாரண தீர்வொன்றை எட்டமுடியும் என்றும் ரஜிவ் காந்தி நம்பிக்கை வைத்திருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்