கொழும்பில் 36 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் 36 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் 36 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2014 | 2:32 pm

கொழும்பின் சில பிரதேசங்களில் நாளை காலை 9 மணியிலிருந்து 36 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், பத்தரமுள்ள, மாலம்பே, தலங்கம, கொஸ்வத்தை, கலபழுவாவ, ஹல்பராவ, தலவத்துகொட, கலல்கொட, ஹோகந்தர மற்றும் ஜயவடனகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கெஸ்பேவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளது.

இதேவேளை கொழும்பு 05, ஹைலெவல் வீதியின் ரயில் நிலைய சந்தியிலிருந்து கிருலப்பனை வரையுள்ள பிரதான மற்றும் குறுக்கு வீதிகள், பேஸ்லைன் வீதி ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் நாளை காலை 9 மணியிலிருந்து தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கின்ஸி வீதி, கொட்டா வீதி, காசல் வீதி பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளவத்தை பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பொல்தூவ புதிய பாலம் நிர்மாணிக்கப்படும் இடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள நீர்க் குழாய்களை, அம்பத்தலேயில் இருந்து கோட்டே வரையான நீர்விநியோக நிலையத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதே நீர் விநியோகம் தடைப்படுவதற்கான காரணம் என நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்