கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை

கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை

கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2014 | 9:19 am

கல்கமுவ, பகுதி வீடொன்றில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் நான்கு வயது பிள்ளை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பிள்ளை கடத்தப்பட்டமை குறித்து பலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

முகமுடி அணிந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரால் பிள்ளை கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியதில் பிள்ளையின் பெற்றோர் காயமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்