94 பாடசாலை மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்; தீர்ப்பு வெளியானது

94 பாடசாலை மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்; தீர்ப்பு வெளியானது

94 பாடசாலை மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்; தீர்ப்பு வெளியானது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 12:02 pm

கும்பகோணம் தீ விபத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் 11 பேர் குற்றமற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு 94 குழந்தைகள் இறப்பதற்கு காரணமாக இருந்த ”கும்பகோணம் பாடசாலை தீ விபத்து” தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்றது

தீர்ப்பை எதிர்பார்த்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலை முதலே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காத்திருந்தனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் பொலிஸ் விசாரணையில் 15,000 பக்கங்களும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் 5,000 பக்கங்களும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விசாரணை செய்யப்பட்ட 501 சாட்சியங்களில், இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உயிர் பிழைத்த குழந்தைகள் உள்ளிட்ட முக்கியமான 230 சாட்சியங்களிடம் நடைபெற்ற நீண்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னர் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தண்டனைகள் தொடர்பில் நீதிமன்றம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்