கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 2:16 pm

வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் 12 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 10 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்றாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டத்தரிப்பு, மாதகல் மற்றும் இளவாளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்