லிந்துலையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்; சந்தேகநபர் விளக்கமறியலில்

லிந்துலையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்; சந்தேகநபர் விளக்கமறியலில்

லிந்துலையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்; சந்தேகநபர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 9:38 am

லிந்துலையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படப்டுள்ளார்.

சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லிந்துல நாகசேனை பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லிந்துலை பகுதியில் 14 வயது சிறுமி மூன்று மாதங்களுக்கு முன்னதாக சந்தேகபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவர் அதிகார சபை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்