கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸை தெரிவு செய்தது ஏன்?

லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸை தெரிவு செய்தது ஏன்?

லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸை தெரிவு செய்தது ஏன்?

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 10:53 am

சாம்பியன் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் லசித் மலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்கின்ற நிலையில், அணியின் தலைவராக செயற்பட்ட மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இது தொடர்பில் மலிங்க இலங்கை கிரிக்கெட் சபையிடம் கேட்டுக்  கொண்டதை அடுத்து அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்க சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்காக விளைாயாட வேண்டுமென்பது எங்களது விருப்பம் எனவும், எனினும் அவரின் தனிப்பட்ட விருப்பின் பேரில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்