போர் நிறுத்தத்திற்கான அழைப்பை நிராகரித்தது – ஹமாஸ்

போர் நிறுத்தத்திற்கான அழைப்பை நிராகரித்தது – ஹமாஸ்

போர் நிறுத்தத்திற்கான அழைப்பை நிராகரித்தது – ஹமாஸ்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 11:36 am

காஸாவில் மீண்டும் தற்காலிக  போர் நிறுத்தம் கொண்டு வருவதற்காக  பலஸ்தீன அமைப்புகள் விடுத்த அழைப்பிற்கு ஹமாஸ் இயக்கம்  மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 24 மணித்தியாலங்கள் தற்காலிக போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த  நிலையில் மீண்டும் 24 மணித்தியாலங்களுக்கு  போர் நிறுத்தம் செய்வதற்கு  ஜிகாத் அமைப்புகள் தயாராக இருப்பதாக பலஸ்தீன விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ் இயக்கம் தமது மக்களுக்காக உயிரை விடுவதற்கு அச்சம் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இயக்க  தலைவர் குரல் பதிவொன்றின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்