கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
புனேயில் மண்சரிவு; 200 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்

புனேயில் மண்சரிவு; 200 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்

புனேயில் மண்சரிவு; 200 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 4:03 pm

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவிற்குள் பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனே மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்ததில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதுடன் மேலும் 200 பேர் வரை மண்சரிவிற்குள் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் விரைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஜுன் தொடக்கம் செம்டெம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் பெய்யும் பருவ மழை காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் வழமையாக மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்