புனித செபஸ்தியார் தேவாலயத்தின் நற்கருணை பேழை திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

புனித செபஸ்தியார் தேவாலயத்தின் நற்கருணை பேழை திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 2:12 pm

கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தின் நற்கருணை பேழை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட நற்கருணை பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தானை செபஸ்தியார் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நற்கருணை பேழையில் வைக்கப்பட்டிருந்த புனித சின்னமும் குறித்த நபரால் திருடப்பட்டுள்ளது.

இந்த புனித சின்னம் இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரவித்துள்ளார்.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவரால் சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்