கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
நான்கு வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

நான்கு வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

நான்கு வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 5:35 pm

நிக்கவரெட்டிய, கடுகம்பொல பகுதியில் 04 வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் தகவல்கள் ஏதும் கிடைத்தால் தமக்கு அறியத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்