நாடு முழுவதும் வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடு முழுவதும் வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடு முழுவதும் வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 9:17 am

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் சிலர் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குவது, நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் ஒருங்கிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

27 தரங்களைச் சேர்ந்த கனிஷ்ட ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தீபிகா விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

நோயாளர் விடுதி எழுதுவினைஞர், உணவு கண்காணிப்பாளர், தொலைபேசி இயக்குனர், மின் தூக்கி இயக்குனர், உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் கனிஷ்ட சுகாதார ஊழியர்களே இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்