தேசிய வைத்தியசாலையில் இரு வைத்திய குழுக்களிடையே மோதல்

தேசிய வைத்தியசாலையில் இரு வைத்திய குழுக்களிடையே மோதல்

தேசிய வைத்தியசாலையில் இரு வைத்திய குழுக்களிடையே மோதல்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 3:45 pm

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு வைத்தியக் குழுக்களுக்கிடையே இன்று பிற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது.

வெளியிலிருந்து வருகை தந்த வைத்தியர்கள் குழுவுக்கும், வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்தியர்கள் சிலர் கூட்டம் ஒன்றை நடத்தியதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அணில் ஜெயசிங்க கூறினார்.

இதன்போது, வெளியிலிருந்து வருகைதந்த வைத்தியர்கள், கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்