சுகாதார​ ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி

சுகாதார​ ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி

சுகாதார​ ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 1:41 pm

சுகாதார ஊழியர்கள் சிலர் கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாடடப் பேரணியால் கொழும்பு நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

தேசிய வைத்தியசாலை அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக அலரிமாளிகை வரை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பள முரண்பாட்டினை நீக்குமாறும், நிலுவை சம்பளத்தை வழங்குமாறும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பிற்கு இணையாக கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவின் இணை ஏற்பாட்டாளர் தீபிகா விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

27 பிரிவுகளைச் சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ள சுகாதார ஊழியர்களில், நோயாளர் விடுதி எழுதுவினைஞர், உணவு கண்காணிப்பாளர், தொலைபேசி இயக்குனர், மின் தூக்கி இயக்குனர், உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஊழியர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கே.எச்.எஸ்.கீரகலவிடம் வினவியபோது, ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊழியர்களுக்கு தெளிவூட்டப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்