சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரின் தடையை நீக்க இணக்கம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரின் தடையை நீக்க இணக்கம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரின் தடையை நீக்க இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 6:48 pm

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட 05 மாணவர்களின் தடையை நீக்கி, அவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இன்று பிரதிவாதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணங்கியுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் உபாலி அபேரத்ன முன்னிலையில் இந்த விடயம் தொடர்பான மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் 02 மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்க முடியாதென பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மனோகர ஜயசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை அடுத்து தமது ஆட்சேபனையை தாக்கல்செய்வதற்கான கால அவகாசத்தை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் தமது மாணவர் அந்தஸ்து சட்டத்திற்கு முரணான வகையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்