கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 9:53 am

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் மூன்றாவது நாளாக இன்று வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

தமது வளாகத்திற்கான தலைவர் வைத்திய கலாநிதி வர்ணகுலேந்திரன் மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவரை பணியிலிருந்து இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் செனரத் திசாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்குமான மாணவர்கள் நேற்று முன்தினம் தொடக்கம் காலவரையறையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது வளாக முதல்வருக்கு எதிராக  பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை வளாக மாணவர்கள் ஆரம்பித்துள்ள வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடர்பில் கிழக்கு பல்கலைகழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது, திருகோணமலை வளாக மாணவர்கள் மேற்கொள்ளும் வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடர்பில் இதுவரை தமக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

வைத்திய கலாநிதி வர்ணகுலேந்திரனின் பணிநிறுத்தம் பல்கலைகழக பேரவையின் தீர்மானத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஒன்றெனவும்   நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளில் மாணவர்கள் அநாவசியமான முறையில் தொடர்புகொள்ளக் கூடாது எனவும் உபவேந்தர்   குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்