இலங்கை தொடர்பான இந்திய அரசின் தீர்மானங்கள் ஏமாற்றமளிக்கிறது – ராமதாஸ்

இலங்கை தொடர்பான இந்திய அரசின் தீர்மானங்கள் ஏமாற்றமளிக்கிறது – ராமதாஸ்

இலங்கை தொடர்பான இந்திய அரசின் தீர்மானங்கள் ஏமாற்றமளிக்கிறது – ராமதாஸ்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 6:51 pm

இலங்கை தொடர்பான இந்திய அரசின் அனைத்து முடிவுகளும் ஏமாற்றம் அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்வதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமென நம்பியிருந்த போதிலும் தற்போது ஏமாற்றமே எஞ்சியுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்காமை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்ற விசாரணைக் குழு இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கான விசாவினை நிராகரித்தமை போன்ற விடயங்கள் தமிழர்களுக்கு ஆறாத மனக் காயத்தை ஏற்படுத்துவதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் நடைபெறும் இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் தீர்மானத்தினை இந்திய அரசு கைவிட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்