இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அநீதி; இந்தியா பாராமுகமாக செயற்படுகிறது

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அநீதி; இந்தியா பாராமுகமாக செயற்படுகிறது

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அநீதி; இந்தியா பாராமுகமாக செயற்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 10:32 am

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் இந்தியா பாராமுகமாக செயற்படுவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் ஓமந்தையில் எதிர்நோக்கிய சம்பவம் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா ஏற்கனவே அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அயல்நாடான இந்தியா, இந்த விடயம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றமை உலகத் தமிழ் மக்களுக்கு வேதனையளிப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழ் மக்கள் விடயத்தில் முன்னைய காங்கிரஸ் அரசாங்கம் போன்று பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கமும் செயற்படக் கூடாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்