இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய படகு கொள்வனவு

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய படகு கொள்வனவு

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய படகு கொள்வனவு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 12:46 pm

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையை தவிர்ப்பதற்காக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கக் கூடிய 60 இலட்சம் ரூபா பெறுமதியான படகு ஒன்றை இராமேஸ்வரம் மீனவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

மீனவர் பிரச்சினைக்கு  தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே ஏற்கனவே இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்ததன.

இதன்போது இந்திய மீனவர்கள் இழுவை முறையிலான மீன்பிடியை காலக் கிரமத்தில் கைவிடவேண்டும் என இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

எவ்வாறாயினும் தமிழக மீனவர்கள் இழுவை மீன்பிடி தொழிலை கைவிட முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது.

இந்த நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான இராமேஸ்வரம் மீனவர்களின் இந்த முயற்சி இலங்கை கடற்பரப்பிற்குள் அவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி தமிழகத்தில் மீனவர்கள் சிலர் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

இராமேஸ்வரம், பாம்பன் மற்றும்  நாகப்பட்டிணம் உள்ளிட்ட தமிழகத்தின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்த கால வரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்