இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்ட நடவடிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்ட நடவடிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 2:35 pm

இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகளை காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய இறுதிக் கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளிலிருந்து இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஆணைக்குழு  நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் ஒரு கட்டமாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திருகோணமலை புல்மோட்டை வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ கூறியுள்ளார்.

இதன்போது யுத்தத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் ஆணைக்குழு கூடியபோது மக்கள் அளித்த சாட்சியங்களுக்கு அமைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் எச்.டபிள்யூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் மன்னார் மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்