கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது; ஆறாவது இடத்திற்கு முன்னேரியது இந்தியா

அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது; ஆறாவது இடத்திற்கு முன்னேரியது இந்தியா

அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது; ஆறாவது இடத்திற்கு முன்னேரியது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 12:16 pm

கிளஸ்கோலில் நடைபெற்று வரும் 20 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இன்று 7ஆம் நாளுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை ஒரு வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் 16ஆவது சுற்றில் இலங்கை வீராங்கனை ஷிரோமலி வீரரத்ன வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.

69 கிலோ கிராம் எடைப்பிரிவுக்கான போட்டியில் அவர் லெசோதோ வீராங்கனையை தோற்கடித்தார்.

இதற்கமைய ஷிரோமலி வீரரத்ன அரையிறுதிப் போட்டியில் நைஜீரிய வீராங்கனையுடன் மோதவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இந்தியா மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளது.

ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமித் குமார் தங்கம் வென்றார்.

அத்துடன் 48 கிலோ எடைப்பிரிவு மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இதன்பிரகாரம் இந்தியா 10 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 36 பதக்கங்களை சுவீகரித்து 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

போட்டிகளில் அதிக தங்கப்பதக்கங்களை பெற்றுள்ள அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

34 தங்கப்பதக்கங்கள், 31 வெள்ளி, 36 வெண்கலப்பதக்கம் அடங்கலாக மொத்தம் 101 பதக்கங்களை பெற்று அவுஸ்திரேலியா பட்டியலில் முதலிடத்திலுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்