சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் பிரித்தானியாவிடம் ஒப்படைப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் பிரித்தானியாவிடம் ஒப்படைப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் பிரித்தானியாவிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2014 | 5:28 pm

யுக்ரேய்னின் கிழக்குப் பிராந்தியத்தில் வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானமான MH17 இன் கறுப்புப் பெட்டிகள் பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கறுப்புப் பெட்டிகளில் இருந்து தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்கு தலைமை தாங்கும் நெதர்லாந்து அதிகாரிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கறுப்புப் பெட்டியிலுள்ள தரவுகள் பதிவிறக்கம் செய்யப்படவுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட குறித்த மலேஷிய விமானத்தில் இருந்த 298 பேரில் 10 பிரித்தானியர்களும் அடங்கியிருந்தனர்.

யுக்ரேய்னிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஏவுகணை மூலம் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேற்குலக நாடுகள்  குற்றஞ்சாட்டியுள்ளன.

எனினும் யுக்ரேய்ன் விமானப் படையின் விமானம் ஒன்றே இந்த விமானத்தை வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்