சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானம்; நெதர்லாந்தில் இன்று துக்க தினம்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானம்; நெதர்லாந்தில் இன்று துக்க தினம்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானம்; நெதர்லாந்தில் இன்று துக்க தினம்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2014 | 12:42 pm

யுக்ரேய்ய்ன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷியவிமானத்தில் பயணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெதர்லாந்தில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் ஏவுகணை தாக்குதலில் விமதானத்தில் பயணித்த 298 பேரும் பலியாகினர்.

அம்ஸ்ட்ரடம்மிலிருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த MH17 விமானத்தில்  பயணித்தவர்களில் 193 பேர் நெதர்லாந்துப் பிரஜைகள் என்பது குறிப்பிடதக்கது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணிகள் கடந்தவாரம் முதல் முன்னெடுக்கபடுவதுடன் இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலங்கள் பரிசோதனைகளுக்கா ரயில்களில் கொண்டு செல்லப்படுவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்