சுமார் 110 இலட்சம் ரூபா பெறுமதியான பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

சுமார் 110 இலட்சம் ரூபா பெறுமதியான பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

22 Jul, 2014 | 7:23 pm

சுமார் 110 இலட்சம் ரூபா பெறுமதியான பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை, நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று (22) கைப்பற்றியுள்ளது.

மிளகாய், மிளகுத் தூள், சோயாமீட் மற்றும் டின் மீன் ஆகிய பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

வெல்லம்பிட்டி, சேதவத்தை பகுதியில் வர்ண தூள்கள் மற்றும் பிஸ்கட் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட சுமார் 15,000 கிலோகிராம் மிளகாய்த் தூள் மற்றும் மிளகுத் தூள் ஆகியன நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களின் பெறுமதி சுமார் 45 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கந்தான கட்டகம பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இருந்து, நுகர்வுக்கு உதவாத 32ஆயிரம் டின் மீன்கள் மற்றும் சோயா மீட் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்