உரிமையாளர், பிரதேசவாசிகளின் எதிர்ப்பினையடுத்து யாழில் 50 ஏக்கர் காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

உரிமையாளர், பிரதேசவாசிகளின் எதிர்ப்பினையடுத்து யாழில் 50 ஏக்கர் காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

22 Jul, 2014 | 5:44 pm

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பெண்ணெருவருக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில்  நிலஅளவைத் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு இன்று (22) சென்றிருந்தனர்.

காணி உரிமையாளரும் பிரதேசவாசிகளும் அரசியல்வாதிகளும் வெளியிட்ட எதிர்ப்பினையடுத்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றிருந்த போது காணி உரிமையாளரான பெண்ணின் உறவினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வெளியிட்ட எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கொடிகாமம் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி காணியை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்ய முயற்சிப்பது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவித்துள்ளார்.

அதற்கிணங்க, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காணியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதோடு ஏணைய 10 ஏக்கர் காணிகளையும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர் குறப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்