முன்னாள் காதலி மீது மரடோனா பொலிஸில் முறைப்பாடு

முன்னாள் காதலி மீது மரடோனா பொலிஸில் முறைப்பாடு

முன்னாள் காதலி மீது மரடோனா பொலிஸில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2014 | 12:03 pm

ஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் ஜாம்பவான் டியாகோ மரடோனா தனது முன்னாள் காதலி மீது திருட்டுச் சம்பவம் தொடர்பில் துபாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கைக்கடிகாரங்கள், வைரத் தோடுகளை ஒலிவா திருடியுள்ளதாக மரடோனா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மரடோனாவின் முன்னாள் காதலி ரோசியோ ஒலிவாவுக்கு (Rocio Oliva) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

53 வயதான மாரடோனாவின் முன்னாள் காதலி 22 வயதான ஒலிவா என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவர்களுக்குள் இப்போது தொடர்பு ஏதும் இல்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் துபாய் சென்ற மரடோனா. ஒலிவாவுடன் தங்கியிருந்துள்ளார். இந்தப் பின்னணியில் ஒலிவா மீது முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ரோசியா ஒலிவா மறுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்