பதுளையில் 80 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

பதுளையில் 80 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

பதுளையில் 80 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2014 | 7:37 am

கடும் காற்றினால் பதுளை மாவட்டத்தில் மூடப்பட்ட 80 பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஹல்துமுல்ல மற்றும் வெலிமடை கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகள் இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண கீர்த்தி திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஏழு பாடசாலைகளின் கட்டடங்கள் கடும் காற்றினால் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சேதமடைந்த கட்டடங்களை விரைவில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மலையகத்தில் வீசும் கடும் காற்றினால் மரக்கறிச் செய்கை மற்றும் மலர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் காற்றினால் மரக்கறி செய்கைகள் அழிவடைந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண கீர்த்தி திஸாநாயக்க தெரிவித்தார்.

இதனால் விவசாயிகளுக்கு பாரியளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பி.ஜீ.குமாரசிறி குறிப்பிட்டார்.

உருளைக்கிழங்கு செய்கை பெருமளவில் பாதிப்படைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான தரவுகள் திரட்டப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்