ஒரு வாரம் கடந்தும் காணாமற்போன குழந்தை பற்றி தகவல் இல்லை!

ஒரு வாரம் கடந்தும் காணாமற்போன குழந்தை பற்றி தகவல் இல்லை!

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2014 | 9:24 pm

திருகோணமலை – முஹம்மதியா நகரில்  ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டு ஒரு வாரம்  கடந்துள்ள போதிலும் குழந்தை பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை என குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி குழந்தை கடத்தப்பட்டதாக திருகோணமலை தலைமை பொலிஸ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பெற்றோர் கூறினர்.

இம்மாதம் 9ஆம் திகதி குழந்தையுடன் வர்த்தக நிலையத்திற்கு சென்று வீடு திரும்பும் வழியில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றதாக குழந்தையின் தாய் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, திருகோணமலை தலைமை பொலிஸ் அலுவலகத்தில் இவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும், இதுவரை தமது குழந்தை தொடர்பிலான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனக் கூறும் பெற்றோர் பிள்ளையைக் கண்டுபிடிக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் திருகோணமலை தலைமை பொலிஸ் அலுவலகத்திடம் நாம் வினவினோம்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அந்த அலுவலகத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி கூறினார்.

குழந்தையை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறிய அவர் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்