எகிப்தின் போர் நிறுத்த யோசனைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸ் நிராகரித்தது

எகிப்தின் போர் நிறுத்த யோசனைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸ் நிராகரித்தது

எகிப்தின் போர் நிறுத்த யோசனைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸ் நிராகரித்தது

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2014 | 3:45 pm

எகிப்து முன்மொழிந்துள்ள போர் நிறுத்த யோசனைக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ள போதும், பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் நிராகரித்துள்ளது.

இந்தப் போர் நிறுத்த யோசனையானது சரணடைவதற்குச் சமம் எனக் கூறி தாம் அதை நிராகரிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள ஹமாஸ் உறுப்பினர்களை விடுவித்து, காஸா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்ற எகிப்துடன் இஸ்ரேல் சேர்ந்து செயலாற்றாத வரையில், இஸ்ரேலுடனான தமது மோதல் வலுக்கவே செய்யும் என்று ஹமாஸின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒருவார காலத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் பெரும்பான்மையாக பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்