அடையாளம் தெரியாத சிலர் பின்தொடர்கின்றனர்; சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ​பொலிஸில் முறைப்பாடு

அடையாளம் தெரியாத சிலர் பின்தொடர்கின்றனர்; சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ​பொலிஸில் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2014 | 6:55 pm

அடையாளம் தெரியாத சிலர் மோட்டார் சைக்கிளில் தன்னைப் பின்தொடர்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

உபுல் ஜயசூரிய முறைப்பாடு செய்துள்ளமையை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

கடந்த வௌ்ளிக்கிழமை (11) இடம்பெற்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் கூட்டம் இந்த நிலைமைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கலாம் என தான் நம்புவதாக உபுல் ஜயசூரிய கருத்துத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்