வடகொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 8:19 pm

வடகொரியா இரண்டு பெலஸ்டிக் ரக ஏவுகணைகளைப் பரீட்சித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய எல்லைக்கு அருகிலுள்ள கேசோங் நகரில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 500 கிலோமீற்றர் வீச்சுக்கொண்டதாக தென்கொரிய இராணுவ அதிகாரியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியுவுடனான எல்லைப் பகுதியில் இருந்து ஏவுகணை ஏவும் செயற்பாடு வழமைக்கு மாறான ஒன்றென வடகொரிய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து முன்னெடுக்கும் இராணுவப் பயிற்சிக்கு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்