மலையகத்தில் கடும் காற்று; சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 800ஆக அதிகரிப்பு

மலையகத்தில் கடும் காற்று; சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 800ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 7:40 pm

மலையகத்தின் பல பகுதிகளிலும் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 800ஆக அதிகரித்துள்ளது.

பதுளை மாவட்டத்திலேயே அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் காற்றினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 23 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

குறித்த மாவட்டங்களில் இரு தினங்களாக வீசும்  பலத்த காற்றின் காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் உரியவாறு வழங்கப்பட்டு வருவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மணிக்கு 70 கிலோமீற்றர் தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று  வீசக்கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பருவக் காற்றின் வேகம் இடைக்கிடை அதிகரிக்க கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்