பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கி பிரயோகம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கி பிரயோகம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கி பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 1:53 pm

பொலிஸாரின் கட்டளையை மீறி கொஸ்கொட யாலேகம பகுதியில் பயணித்த லொறி ஒன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த லொறியில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொஸ்கொட பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் இன்று காலை கடமையில் இருந்த போது பயணித்த லொறியை நிறுத்துவதற்கான கட்டளையிட்ட போதும் , பொலிஸாரின் கட்டளையை மீறி லொறியை ஓட்டிச் சென்றதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது  லொறியிலிருந்த இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.லொறியில் மூன்று பசு மாடுகள்  கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவத்தின் போது அதில் ஒரு மாடு உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்