பாவனைக்கு உதவாத 15,600 சோஸ் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

பாவனைக்கு உதவாத 15,600 சோஸ் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

பாவனைக்கு உதவாத 15,600 சோஸ் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 7:03 pm

பாவனைக்கு உதவாத 15,600 சோஸ் போத்தல்கள் வத்தளை பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து சோஸ் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட தலைமை அதிகாரி ரஞ்சித் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

காலாவதியான மற்றும் பங்கஸ் படிந்த நிலையில் நுகர்விற்கு பயன்படுத்த முடியாத சோஸ் போத்தல்களே கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள சோஸ் போத்தல்களின் மொத்தப் பெறுமதி 45 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பாவனைக்கு உதவாத மேலும் 350 சோஸ் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமை அதிகாரி ரஞ்சித் வீரவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்