சுப்பர் ஃபைட்டர் மாபெரும் இறுதிப் போட்டி இன்று

சுப்பர் ஃபைட்டர் மாபெரும் இறுதிப் போட்டி இன்று

சுப்பர் ஃபைட்டர் மாபெரும் இறுதிப் போட்டி இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 10:46 am

2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குத்துச் சண்டையில் பதக்கம் வெல்லும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இலங்கையின் முதலாவது ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சியான சுப்பர் ஃபைட்டர் போட்டிகளின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானையிலுள்ள ஸ்டைய்ன் கலையக தொகுதியில் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை குத்துச் சண்டை சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து எம்.ரி.வி. / எம்.பி.சி. மற்றும் நியூஸ்பெஸ்ட், சுப்பர் ஃபைட்டர் ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றது.

மாபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் மக்ளின் பொரும் ஆரதவுடன் பல்லேகல தொழில் பூங்காவிலிருந்து இரத்மலானை பயிற்சி முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கொழும்பை நோக்கி ஜேற்று அழைத்து லரப்பட்ட வீரர்களுக்கு வீதியின் இரு மருங்கிலும் கூடிய ரசிகர்களின் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சுப்பர் பைடர் வீரர்களை பாரிய வரவேற்பும் வழங்கப்பட்டது.

இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிக் கோதாக்களில் 49 கிலோ கிராம் எடைப் பிரிவு கோதாவில் கண்டி வித்யார்த்த கல்லூரி வீரரான இசங்க சஞ்சயவுடன் கொழும்பு றோயல் கல்லூரி வீரரான கிருஷ்ணமேனன் சிந்துஜன் மோதவுள்ளார்.

52 கிலோ கிராம் எடைப் பிரிவில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் லசித் சந்தீப்ப தசநாயக்கவுடன் தெல்கொட கல்யானி பிரதீப பிரிவெனாவின் புத்திக மனரம் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

ஹொரன வித்யாரத்ன கல்வியியற் கல்லூரியின் பானுக ஜயம்பதியை 56 கிலோ கிராம் எடைக்குட்பட்ட கோதாவில் பேராதனை மத்திய மகா வித்தியாலயத்தின் நுவன் குமார எதிர்கொள்ளவுள்ளார்

60 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஹொரன வித்யாரத்ன கல்வியியற் கல்லூரியின் சந்தீப சமரசிங்கவுடன் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் லக்சான் லியனகே போட்டியிடவுள்ளார்.

இந்த போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு 360 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் உட்பட முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் நடைபெற்ற தேர்வுப் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்