காஸாவில் தாக்குதல் மேற்கொண்டதை உறுதிப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் தாக்குதல் மேற்கொண்டதை உறுதிப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் தாக்குதல் மேற்கொண்டதை உறுதிப்படுத்தியது இஸ்ரேல்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 8:25 pm

காஸாவில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

யுத்த நிறுத்தம் தொடர்பான தகவல்களுக்கு மத்தியில் பலஸ்தீனத்தின் சில பகுதிகளிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

காஸாவின் வடபிராந்திலுள்ள பெய்ட் லஹியா பகுதியிலுள்ள மக்களையே இவ்வாறு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதிகளிலுள்ள மக்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

4,000 மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்’களில் 159 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்