காஸாசிவில் நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்

காஸாசிவில் நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்

காஸாசிவில் நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 1:05 pm

காஸா பகுதியில் முன்னெடுக்கப்படும்  தொடர் தாக்குதல்களை முடிவிற்கு கொண்டு வருமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

அண்மை நாட்களில் காஸா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 6 நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் காஸாவில் இடம்பெற்ற வான்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் காஸா பொலிஸ் உயரதிகாரியொருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 90 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்