கதிர்காமம் சென்ற வேன் 100அடி பள்ளத்தில் வீழ்ந்தது; 13 பேர் காயம்

கதிர்காமம் சென்ற வேன் 100அடி பள்ளத்தில் வீழ்ந்தது; 13 பேர் காயம்

கதிர்காமம் சென்ற வேன் 100அடி பள்ளத்தில் வீழ்ந்தது; 13 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 4:33 pm

எல்ல வெல்லவாய வீதியில் இராவண எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வேன் இன்று மதியம் 12.45 அளிவில் சுமார் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் எல்ல, பண்டாரவளை மற்றும் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்திற்கு சென்று வீடு திரும்பிய குழுவினரின் வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளானவர்கள் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்