வவுனியாவில் பஸ் விபத்து; ஒருவர் பலி,12 பேர் காயம்

வவுனியாவில் பஸ் விபத்து; ஒருவர் பலி,12 பேர் காயம்

வவுனியாவில் பஸ் விபத்து; ஒருவர் பலி,12 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 4:34 pm

வவுனியா விளக்குவைத்த குளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த 29 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ந. அகிலேந்திரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

கவலைக்கிடமாக உள்ளவர்களில்  ஒருவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் 6 மாத குழந்தையும் உள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின்   பணிப்பாளர்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மாலை மூன்று மணியளவில் விபத்துக்குள்ளாதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்