வட மாகாண அமைச்சர்களுக்கு வாகனங்கள் கையளிப்பு

வட மாகாண அமைச்சர்களுக்கு வாகனங்கள் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 8:16 pm

வட மாகாண சபையின் அவைத் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கான வாகனங்களைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று வட மாகாண ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், விவசாய அமைச்சர் ப.ஜங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் பி.டனீஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் ரீ.குருகுலராஜா ஆகியோருக்கான வாகனங்கள் கையளிக்கப்பட்டன.

குறித்த வாகனங்களை அவைத் தலைவரின் செயலாளர் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதேவேளை வட மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கான வாகனங்கள் இன்னமும் தருவிக்கப்படவில்லையெனவும் எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்