தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நால்வர் மலேஷியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நால்வர் மலேஷியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நால்வர் மலேஷியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 9:15 am

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு, மலேஷியாவை தளமாக பயன்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை மலேஷிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், 1999 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலொன்றின் முக்கிய உறுப்பினர் என மலேஷிய பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் காலித் அபு பாக்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மூவரிடமும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அகதி அந்தஸ்துக்கான அடையாள அட்டைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மலேஷிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்