ஜெர்மனில் உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது

ஜெர்மனில் உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது

ஜெர்மனில் உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 11:09 am

ஜேர்மனில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான குறித்த நபர் தொடர்பில் உரிய தகவல்கைள வழங்குமாறு அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்திடம்  ஜேர்மன் நாட்டு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் ஜேர்மனின் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனமொன்றில் பணிபுரியவதாக சந்தேகம் வெளியிடப்பட்ட போதுலும் விடயம்  தொடர்பலான மேலதிக தகவல்களை வெளியிட ஜேர்மன் அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜேர்மன் அதிபர் எங்கலோ மெர்கலின் தொலைபேசி உரையாடல்களை உளவு பார்த்தாக அமெரிக்கா மீது குற்றஞ்சுமத்தப்பட்டு  இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் இந்த கைது விவகாரம் தொடர்பில் ஜேர்மன் அதிகாரிகள்  கூடிய கவனத்துடன் விசாணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்