கம்பஹாவில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

கம்பஹாவில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

கம்பஹாவில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 9:19 am

கம்பஹா, மல்வத்து-ஹிரிபிட்டிய பகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் நேற்றிரவு 8.30 முதல் 9.05 க்கு இடைப்பட்ட நேரத்திற்குள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மல்வத்து-ஹிரிபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்தபோதே வர்த்தகர் மீது தப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

தெற்கு இந்துருவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தலைமறைவாகிய சந்தேநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்