கடந்த ஆறு மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 335 முறைப்பாடுகள்

கடந்த ஆறு மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 335 முறைப்பாடுகள்

கடந்த ஆறு மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 335 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 2:02 pm

வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக மக்களிடமிருந்து 335 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றுள் 227 முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் பண்டார தென்னக்கோன் குறிப்பிடுகின்றார்.

பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் 145 முறைபாடுகள் கிடைத்திருந்ததாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

பக்கசார்பாக செயற்பட்டமை தொடர்பில் 86 முறைபாடுகளும், அதிகார துஷ்பிரயோகம் குறித்து 67 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி தொலைபேசி அழைப்புப் பிரிவிற்கு வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 1,129 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றுள் 554 முறைப்பாடுகள், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளன.

பொலிஸார் தொடர்பில் 071 036 10 10 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைபாடுகளை தெரிவிக்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்