வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதில்லை- லக்ஸ்மன் யாப்பா

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதில்லை- லக்ஸ்மன் யாப்பா

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 9:37 am

வெளிநாட்டவர்களுக்கு நாட்டிலுள்ள காணிகளை விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அண்மையில் கொழும்பில் உள்ள காணியொன்று வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு  விற்பனை செய்துள்ளமை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரியவந்தது.

இது தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெளிவுபடுத்தினார்.

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பில் இரண்டு ஏக்கர் காணியை சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு ஏலம் விடப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்த கருத்து:-

“எவிக் சர்வதேச நிறுவனம் கோல்பேஸ் காணியை கேட்டது. 2013 ஆண்டின் வர்த்தமானி அறிவிப்பின் படி விற்பனை செய்வதில்லை என கூறினோம். இவர்கள் தனியார் காணி ஒன்றை ஆர் .ஏ. டிமெல் மாவத்தையில் கொள்வனவு செய்திருந்தனர். B மற்றும் C  என்ற பகுதிகளை கொள்வனவு செய்திருந்தனர்
A பகுதி வழக்கில் இருந்தது.  2013 ஆண்டில் தான் A பகுதி வாங்கப்பட்டது.  எமக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. வழக்கு காணப்பட்டமையினால் B மற்றும் C   பகுதிகளை கொள்வனவு செய்ய முடியாமல் போனது. தற்போது முதலீடு செய்யும் போது வர்த்தமானியை காண்பித்தேன். முன்னர் இருந்தது போன்று காணியை தருமாறு கேட்கின்றனர். அமைச்சரவை அனுமதி வழங்கியது. முன்பு இருந்ததுப் போன்று A பகுதி வழங்க ஏற்பட்டது.”


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
c[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்