வட மாகாணத்தில் விசேட போக்குவரத்து பிரிவு ஸ்தாபிப்பு

வட மாகாணத்தில் விசேட போக்குவரத்து பிரிவு ஸ்தாபிப்பு

வட மாகாணத்தில் விசேட போக்குவரத்து பிரிவு ஸ்தாபிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 2:12 pm

வட மாகாண நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கு வசதியாக விசேட போக்குவரத்துப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 272 அதிவேக மோட்டார் சைக்கிள்களில் 23 மோட்டார் சைக்கிள்கள் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே வட மாகாணத்தில் வாகனப் போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு புதிதாக விசேட போக்குவரத்துப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் மூலம் ஏ-9 வீதி உட்பட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளிலுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்து சம்பந்தமான சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், பொது மக்களின் நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்கு 5 புதிய மோட்டார் சைக்கிள்களும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம் பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவுகளுக்கு 4 மோட்டார் சைக்கிள்கள் வீதமும், மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்கு 2 மோட்டார் சைக்கிள்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்