யாழ்.பல்கலைக்கழக மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 2:50 pm

யாழ்.கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் தலையாழி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு முன்பாகவுள்ள மா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இளைஞனின் சடலத்தை மீட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 24 வயதான மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா, காந்திபுரம் சாஸ்திரி கூலாம்குளம் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞன், யாழ் கொக்குவில் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்தே பல்கலைக்கழக கல்வியை முன்னெடுத்து வந்துள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்