முரளி,சச்சின், லாரா: இது தான் சிறந்த கிரிக்கெட் செல்ஃபீயா? (Photo)

முரளி,சச்சின், லாரா: இது தான் சிறந்த கிரிக்கெட் செல்ஃபீயா? (Photo)

முரளி,சச்சின், லாரா: இது தான் சிறந்த கிரிக்கெட் செல்ஃபீயா? (Photo)

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 5:19 pm

வியாழக்கிழமை இரவில் இருந்து ட்விட்டரில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபீ புகைப்படங்களாக தான் உள்ளது.

Lords1

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தின் 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு “எம்.சி.சி. ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட்” என்ற கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை லோர்ட்ஸ் மைதானத்தின் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் லண்டனில் கூடியுள்ளனர். ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வார்ன், ராகுல் டிராவிட், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் லண்டனில் கூடியுள்ளனர்.

x03-sachin-lara-honour-final-test-600.jpg.pagespeed.ic.OC8urEEx8i

வியாழக்கிழமை இரவு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது சச்சின் உள்ளிட்ட வீரர்கள் கூட்டாக சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் செல்ஃபீக்கள் எடுத்துக் கொண்டனர். இதில் சில புகைப்படங்கள் லார்ட்ஸின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு செல்ஃபீயில் சச்சின், டிராவிட், வார்ன், லாரா, முரளிதரன், யுவராஜ் சிங் என்று ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்றாக உள்ளனர். இந்த செல்ஃபீயை பார்த்த ஷேன் வார்ன் எம்.சி.சி. அணியுடன் இது தான் சிறந்த செல்ஃபீ என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்