முத்துராஜவெலவிற்கான எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

முத்துராஜவெலவிற்கான எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

முத்துராஜவெலவிற்கான எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 2:21 pm

முத்துராஜவெல எரிபொருள் விநியோக குழாய் கட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அதன் ஊடான  எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கடல் மார்க்கமாக விநியோகிக்கும் குழாய்க் கட்டமைப்பிலிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த டி சில்வா நியுஸ் பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

இதன் பிரகாரம் எரிபொருள் விநியோக குழாயில் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சுழியோடிகள் அனுப்பிவைக்கட்டு்ள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படமாட்டாது என்றும் சுசந்த டி சில்வா சுட்டி்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்